“பெரியார் இல்லாவிட்டால் நான் இன்னும் கோவணத்துடன் ஏர் ஓட்டிக்கொண்டுதான் இருந்திருப்பேன்”- துரைமுருகன்

பெரியார் இல்லாவிட்டால் நான் இன்னும் கோவணத்துடன் ஏர் ஓட்டிக்கொண்டுதான் இருந்திருப்பேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
3000-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 51 பொறுப்பாளர்கள் உட்பட 3,000 மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மண்டல செயலாளர் - 1, மாவட்ட செயலாளர்கள் - 8, ஒன்றிய செயலாளர்கள் - 5, சார்பு அணி நிர்வாகிகள் - 9, தொகுதி செயலாளர்கள் - 6, முன்னாள் எம் பி வேட்பாளர்கள் - 3, முன்னாள் எம் எல் ஏ வேட்பாளர்கள் - 6 என 51 பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், “பெரியார் இல்லாவிட்டால் நான் இன்னும் கோவணத்துடன் ஏர் ஓட்டிக்கொண்டுதான் இருந்திருப்பேன். இந்தியாவில் தமிழ் சமூகம் தலை நிமிர்ந்து நிற்பதற்கு தந்தை பெரியார்தான் காரணம். மக்களின் கவனத்தை திசை திருப்ப நினைப்பவர்கள் தலைவர்கள் அல்ல, தரம் தாழ்ந்த பிம்பங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி வந்தவர்கள் யாரும் கெட்டுப்போனது இல்லை” என்றார்.