என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன்.. கட்சிக்கு துரோகம் செய்வோரை மன்னிக்க மாட்டேன் - துரைமுருகன்

 
duraimurugan

என்னையே கொல்ல வந்தவனையும் மன்னிப்பேன் ஆனால் கட்சிக்கு துரோகம் செய்தவனை மன்னிக்க மாட்டேன் என திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

duraimurugan

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான நந்தகுமார் மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “தேர்தலில் எப்படி வியூகம் வகுப்பார்கள், எதிர்க்கட்சி  எப்படி வியூகம் வகுப்பார்கள்,  நமது கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கு எப்படி ஓட்டு போடுவார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியும். கடந்த தேர்தலில் நான் ஏமாந்துவதற்கு காரணம் கொரோனா வந்ததால் நான் படுத்து விட்டேன். என்னால் வேகமாக வர முடியவில்லை, போக முடியவில்லை இல்லை என்றால் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன். சில துரோகங்கள் சேர்ந்து நடத்தி விட்டார்கள். அதுவும் எனக்கு தெரியும். ஆகையினால் துரோகிகளை களையெடுத்து விட்டு தேர்ந்தெடுக்கவில்லை. வெற்றிகரமாக நடத்தும் ஆற்றல் துரைமுருகனுக்கு உண்டு.

நான் யாரையும் மன்னிப்பேன் ஆனால் கட்சிக்கு துரோகம் செய்பவனை மன்னிக்க மாட்டேன். எதிரியே என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன். இது நம்முடைய கட்சி, இது என்னுடைய கட்சி. இந்த கட்சிக்கு துரோகம் செய்வதை விட உலகத்தில் கொடுமை இருக்க முடியாது. கடந்த முறை எல்லோரும் நல்லவர்கள் என்று நினைத்து விட்டேன் அதன் விளைவு தான் பல பாடங்கள் எனக்கு கற்பிக்கப்பட்டது” என ஆவேசமாக பேசினார்.