கருணாநிதி, ஸ்டாலினைவிட உதயநிதி உயர்ந்து நிற்பார் - துரைமுருகன்

 
துரைமுருகன்

தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் உதயநிதி ஸ்டாலின் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ஒழித்து வரலாறு படைப்பார் உதயநிதி - அமைச்சர் துரைமுருகன்.! -  Seithipunal

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம், இந்தியாவுக்கே எரிநட்சத்திரமாக விளங்கிக்கொண்டிருக்கிறார் உதயநிதி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைவிட உதயநிதியின் அரசியல் வீச்சு உயர்ந்து நிற்கப்போகிறது. தாத்தா, அப்பாவை ஜெயிப்பார். அதற்கான காலம் வரும், அந்த காட்சியை நான் இருந்து பார்ப்பேன். நான் போட்ட கணக்கு சரிதான். தன்னை பின் தொடர்பவர்களை கொள்கையோடு வளர்க்கப்பார்க்கிறார்.” என்றார்.