“வேறு கட்சிக்குச் செல்வது சட்டவிரோதம் அல்ல”- துரை வைகோ

 
“வேறு கட்சிக்குச் செல்வது சட்டவிரோதம் அல்ல”- துரை வைகோ

வேறு கட்சிக்குச் செல்வது சட்டவிரோதம் அல்ல என மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக எம்.பி. துரை வைகோ, “சட்டமன்றத்தில் கொராடாவை மீறி வேறு கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் அதற்கு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தற்போது ஒரு கட்சியின் 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு செல்வது சட்டவிரோதம் அல்ல. மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிருஷ்டவசமானது. துரதிர்ஷ்டவசமாக திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம், அதனால் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எங்களால் ஆதரவு அளிக்க முடியவில்லை. வேறு கட்சிக்குச் செல்வது சட்டவிரோதம் அல்ல. திருச்சி எம்.பி. என்ற முறையில் முதல்வரை வரவேற்றேன். தொகுதி மக்களுக்காக விரைவில் முதல்வர் விஜய்யை சந்திப்பேன். முதல்வரை சந்திக்கும் வாய்ப்புகளை உருவாக்குவேன்.  ஜூன் 27ஆம் தேதி மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா என்பதை ஜனநாயக முறைப்படி கட்சியினருடன் ஆலோசனை செய்வோம். மதிமுக தனி இயக்கம். சட்டமன்றத்தில் தவெகவை ஆதரித்து வாக்களித்தால்தான் தவறு. எங்கள் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கலாம்” என்றார்.