ஆளுநர் முழுக்க முழுக்க சங்கியாக மாறியுள்ளார்- துரை வைகோ

 
இவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம்.. மற்றவர்கள் வெளியே போகலாம் - துரை வைகோ காட்டம்..

மதத்தையும், அரசியலையும் ஒன்றிணைத்து நாட்டை சீரழிக்கும் நிகழ்வாக தான் அயோத்தி ராமர் கோவிலை நான் பார்க்கிறேன் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியா? - நிர்வாகிகள் விரும்புவதாக வைகோ  தகவல் | Durai Vaiko contest in Lok Sabha elections - hindutamil.in

சென்னை அடுத்த போரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, “வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த பேச்சுவார்த்தைக்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் வரவில்லை. கூட்டணி குறித்த  பேச்சுவார்த்தைக்கு மதிமுகவில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்டது. இந்த முறை 2 தொகுதிகள் கேட்கவுள்ளோம். ஈரோடு, விருதுநகர், காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்களில் மதிமுகவின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. இங்கு மதிமுக போட்டியிட்டாலும் இந்தியா கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டாலும் வெற்றிபெற மதிமுகவின் பங்கு பெரிதாக இருக்கும். தனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை, ஆனால் கட்சி தொண்டர்கள், தலைவர் விரும்பினால் போட்டியிடுவேன்.


மதங்களை கடந்து, அரசியலுக்கு அப்பார்ப்பட்டவர் ரஜினிகாந்த், ஆனால் அவர் சங்கி குறித்து பேசியதற்கு எனக்கு மாறுபாடு உள்ளது. அரசியலையும் மதத்தையும் கலப்பவர் சங்கி என்பேன். கோட்சேவை சங்கி என்பேன், அவனை நல்லவன் என்போரையும் சங்கி என்பேன், மதங்களை வைத்து வெறுப்பு அரசியல் செய்வோரை சங்கி என்பேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ராமர் கடவுளே விரும்பி இருக்க மாட்டார். ராமர் கடவுளின் விருப்பத்திற்கு குதிர்க்கமாக, எதிராக கட்டப்பட்ட கோவில் தான் அயோத்தி ராமர் கோவில். அயோத்தி ராமர் கோவிலை தவிர இந்தியாவில் உள்ள எல்லா கோவிலிலும் ராமர் இருப்பார். பல்லாயிரக்கணக்கான பேரை காவு வாங்கிய அயோத்தி கோவிலில் ராமர் இருக்கமாட்டார். மதத்தை வைத்து அதனை வாக்கு வங்கி மாற்றுபவர்கள் தான் சங்கிகள். அயோத்தி ராமர் கோவிலை வைத்து தேர்தலில் வெற்றிபெறலாம் என பாஜக திட்டமிட்டு உள்ளது. ஆனால் கடந்த தேர்தலில் போது பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகள்  செயல்படுத்தப்படவில்லை. வேலை வாய்ப்பு பற்றாக்குறை இந்தியாவில் தலைவிரித்து ஆடுகிறது. படித்த படிப்பிற்கு வேலை இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பல்வேறு வாக்குறுதிகள் செய்யவில்லை. இதனை மறைக்க தான் தற்போது அயோத்தி ராமர் கோவில். மதத்தையும், அரசியலையும் ஒன்றிணைத்து நாட்டை சீரழிக்கும் நிகழ்வாக தான் அயோத்தி ராமர் கோவிலை நான் பார்க்கிறேன்.

ம.பி. தேர்தலில் வெற்றி பெற பாஜக ரூ.12 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது: துரை  வைகோ | Tamil News Durai Vaiko Indictment BJP

அயோத்தியில் 50 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசிற்கு போதுமான நிதி வழங்கவில்லை. ஒரு மாற்றான் தாய் போன்று தான் ஒன்றிய அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கு  தேவையான நிதி, திட்டங்களை  பெற்று தருவதற்கு ஆளுநர் வாய்த் திறப்பதில்லை. ஆனால் தமிழ்நாடு அரசிற்கும், திட்டங்களை செயல்படுத்த குடைச்சல் கொடுத்து வருகிறார். ஆளுநர் முழுக்க முழுக்க சங்கியாக தான் மாறியுள்ளார். தேச பிதா காந்தியை கொச்சைப்படுத்தி பேசினார். தமிழ்நாட்டில் இந்திய கூட்டணிக்கு மக்கள் ஆறுதல் கொடுப்பார்கள். தமிழ்நாட்டை பொருத்தவரை 39 தொகுதிகளிலும் வெற்றிப் பெறுவோம். நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து அவரது கொள்கைகளை சொல்லட்டும், அதனை ஏற்று மக்கள் ஆதரிப்பார்கள். வரும் காலங்களில் நடிகர் விஜய் மட்டும் அல்ல மக்களுக்கு சேவை செய்யும் எந்த கட்சியாக இருந்தாலும் அதன் பக்கம் மதிமுக நிற்கும்” என்றார்.