"என் படத்தை உலகளவில் Famous ஆக்கிய எலான் மஸ்க்கிற்கு ரொம்ப நன்றி"- நடிகர் துரை சுதாகர்

 
சுதாகர்

உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருபவர் எலன் மஸ்க். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர்,  உலகில் நடக்கும் விஷயங்களை பற்றி கலாய்க்கும் வகையிலும் சர்ச்சையை கிளப்பும் வகையிலும் தொடர்ந்து பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

Image

இந்நிலையில் அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தை கலாய்த்து தனது X தளப் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார். அந்த பதிவிற்கு 2017ல் வெளியான 'தப்பாட்டம்' படத்தின் காட்சியை எலான் மஸ்க் மீம்-ஆக பகிர்ந்தார். கதைப்படி கதாநாயகி  இளநீரை ஸ்ட்ரா போட்டு குடிப்பதும் கதாநாயகன் சுதாகர் கதாநாயகி அருந்தும் ஸ்ட்ராவிலிருந்து இளநீர் அருந்துவது போன்ற ஸ்டில்லை  எலன் மஸ்க் படம் போட்டு ட்விட்  செய்துள்ளார். இதற்கு அந்த படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான துரை.சுதாகர் நன்றி தெரிவித்துள்ளார். 

Image

தான் நடித்த  திரைப்படத்தின் காட்சியை எலான் மஸ்க் பயன்படுத்தியது  மூலம் உலகம் முழுவதும் இணையதளம் மூலம் பரவியதால்  மகிழ்ச்சியடைவதாக கூறும் சுதாகர், எலான் மஸ்கிற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறுகிறார்.