கனமழை எதிரொலி- சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை
கனமழை பெய்து வருவதால் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தெரிந்தவரும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் படுக்கையில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை , பெளர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர் கோவிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை நவம்பர் 28 ஆம் தேதி கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடைபெறும் நிலையில் மழை காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.