குடிபோதையில் கார் ஒட்டியதில் ஏற்பட்ட விபத்து... கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் பலி..!
விருதாச்சலத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் வெங்கடேசன், இவர் மாருதி சுசுகி காரில் தன் நண்பர்களான ஐயப்பன் , ஆதினேஷ், வேல்முருகன், கண்ணன் ஆகியோரும் உடன் சென்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கொளஞ்சியப்பர் கோவில் பகுதிக்கு சென்று அங்கிருந்து சித்தலூர் நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் வெங்கடேசனின் நண்பர்கள் ஆதினேஷ் , ஐயப்பன் ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர்கள்.
மற்றொரு இளைஞரான வேல்முருகன் படுகாயங்களுடன் சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி வேல்முருகனும் உயிரிழந்துவிட்டார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.வெங்கடேசன், கண்ணன் ஆகியோர் காயங்களுடன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

