ஒரு கிலோ முருங்கைக்காய் 6 ரூபாய்க்கு விற்பனை..!

 
1

திருப்பூரில் உள்ள தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் வாரச்சந்தை பேரூராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்தச் சந்தையில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை பொதுமக்கள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தச் சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. குறைந்த விலைக்கு முருங்கை விற்பனையாண்டதால் முருங்கை விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.