மேளதாளம் முழங்க எல். முருகனுக்கு உற்சாக வரவேற்பு! அவிநாசி அருகே அனல் பறக்கும் தேர்தல் களம்..!
Apr 18, 2026, 06:10 IST1776472837000
சேவூர் அடுத்துள்ள குட்டகம் ஊராட்சிப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட எல்.முருகன், திருமலைக் கவுண்டன்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் மேளதாளம் முழங்க, மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை எடுத்துரைத்து எல்.முருகன் ஆதரவு திரட்டினார். இதையடுத்து பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக தொகுதி பொறுப்பாளர் அம்பாள் பழனிச்சாமி, அவிநாசி வடக்கு ஒன்றியச் செயலாளர் சேவூர் வேலுச்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆனந்தகுமார், பாஜக மண்டல தலைவர் நந்தினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


