35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!

 
1

 கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தடைந்த கிரீஸ் என்ற பயணியிடம் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கிரீஸ் வைத்திருந்த பையில் சுமார் 3.5 கிலோ எடையுடைய போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. கொக்கைன் ரகத்தை சேர்ந்த இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.