போதைப்பொருள் : ஆசிரியர்களுக்கு உத்தரவு
Sep 12, 2023, 08:51 IST1694488864142

பள்ளி அருகே போதைப்பொருள் விற்பனை தொடர்பாக போலீசாருக்கு புகாரளிக்க ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் , பரிசோதனையில் பற்களில் போதை பொருளினால் ஏற்படும் கரை உள்ளதா என்பதை கண்டறியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்களின் தீமைகளை எடுத்துக் கூறி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், போதைப்பொருட்களை விற்கும் கடைகள் விபரத்தை காவல்துறைக்கு ஆசிரியர்கள் அளிக்க வேண்டும் என்றும் போதைப்பொருளை பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிந்து சிகிச்சை, ஆலோசனை வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.