போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்கவேண்டும்- மு.க.ஸ்டாலின்

 
mkstalin

தென்மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் சட்டம், ஒழுங்கு குறித்து ஒன்றரை மணி நேரம் முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Image

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காவல்துறை உயரதிகாரிகளுடன் சட்ட, ஒழுங்கு பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறை கூடுதல் இயக்குனர் சங்கர், தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், காவல்துறை துணைத்தலைவர் பொன்னி, மதுரை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், திண்டுக்கல் எஸ்.பி.பாஸ்கரன், சிவகங்கை எஸ்.பி. செல்வராஜ், இராமநாதபுரம் எஸ்.பி.தங்கதுரை, தேனி எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்ரா, மதுரை காவல் ஆணையர் ரவீந்திரன் நாயர் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் தென்மாவட்டங்களில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பதுக்கலை கட்டுப்படுத்தி தடுப்பது குறித்தும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலை தடுப்பது ஐந்து மாவட்டங்களில் கொடுங் குற்றங்களில் செயல்படுவது யார் தொடர் குற்றங்களில் செயல்படுவினுடைய கண்காணிப்பு எவ்வாறு உள்ளது கொலை கொள்ளை குற்றங்கள் தடுப்பது குறித்தும் ஜாதிய மோதல்களை கண்காணித்து அறவே தடுப்பது குறித்தும் குற்றங்களை தடுப்பதை விட குற்றங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தென்மாவட்டங்களில் சாதிய, மத மோதல்கள் ஏற்படாத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ரவடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Image

இந்தக்கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து முதல்வர் கீழடிக்கு கிளம்பும் முன் கரும்பாலை பகுதியில் மனு அளிக்க நின்றிருந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்களிடம் காரில் இருந்து இறங்கி மனுக்களை பெற்றார்.