போதை பொருள் ஒழிப்பு - ரூ.264.14 கோடி ஒதுக்கீடு

 
கோயில் சொத்துகள் மீட்பு - முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழ்நாட்டில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்களுக்கு 65 போதை பொருள் தடுப்பு படைகள் அமைக்கப்படுவதற்கு ரூ.264.14 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் மட்டும் 12 போதை பொருள் தடுப்பு படைகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த புதிய பணிக்குழுவில்65 ஆய்வாளர்கள், 130 உதவி ஆய்வாளர்கள், 325 காவலர்கள் பணியாற்றுவார்கள். சென்னையில் மட்டும் 12, ஆவடி,தாம்பரம், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, நெல்லையில் தலா 2 படைகள் உருவாக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.