‘குவாட்டர்’ கேட்டு திருப்பதி ராஜகோபுரத்தின் மீது ஏறி தங்க கலசங்களை சேதப்படுத்திய போதை ஆசாமி

 
ந் ந்

திருப்பதி கோவிந்தராஜ சாமி கோயில் ராஜ கோபுரம் மீது ஏறி கலசத்தை சேதப்படுத்திய போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.


திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற  ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நேற்று இரவு ஏகந்த சேவை  முடிந்ததும், குடிபோதையில் இருந்த ஒருவர் கோயிலுக்குள் நுழைந்தார். அவரை தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் கவனிப்பதற்குள் அவர் கோயிலின் ராஜகோபுரத்தின் மீது ஏறி கோபுர கலசங்களை வெளியே எடுக்க முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். அதற்கு மது அவர் மது பாட்டீல் கொடுத்தால் தான் கீழே இறங்குவதாக கூறினார். 


இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் ராட்சத ஏணி கொண்டு வந்து கோபுரத்தின் மீது ஏறி அந்த நபரை மூன்று மணி நேரம் போராடி கீழே இறக்கினர். பின்னர் அவரிடம் விசாரித்ததில் அவர் தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டம், பெத்தமல்ல ரெட்டி காலனி, கூர்மா வாடாவைச் சேர்ந்த குத்தாடி திருப்பதி என தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நபரை திருப்பதி கிழக்கு நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணைக்குப் பிறகு அனைத்து விவரன் வெளிப்படுத்துவோம் என கிழக்கு டிஎஸ்பி பக்தவத்சலம் தெரிவித்தார். சைக்கோவால் கோயில் கோபுரத்தில் இருந்த இரண்டு கலசங்களை லேசாக  சேதம் ஏற்பட்டது. இதனால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.