தமிழிசை ராஜினாமா ஏற்பு - சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

 
Tamilisai

தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.

tamilisai

தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை செளந்தரராஜன். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார் தமிழிசை சௌந்தரராஜன். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

tn

இந்நிலையில்  ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, தெலுங்கானா ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் நேற்று ராஜினாமா செய்தார்.