கைதிகளை கண்காணிக்க ட்ரோன் கேமரா - கோவை மத்திய சிறை நடவடிக்கை...

 
கைதிகளை கண்காணிக்க ட்ரோன் கேமரா -  கோவை மத்திய சிறை நடவடிக்கை...


கோவை மத்திய சிறையில் கைதிகளைக் கண்காணிக்க ட்ரோன் கேமரா பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.  

கைதிகளை கண்காணிக்க ட்ரோன் கேமரா -  கோவை மத்திய சிறை நடவடிக்கை...

கோவை மத்திய சிறையில் 1,850 கைதிகள் உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிறைகளில் இருந்த அடாவடிக் கைதிகள், ரவுடிகள், முக்கிய கொலைக் குற்றவாளிகள் என பலர் பாதுகாப்பிற்காக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சிறையில் கைதிகள் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. அதாவது சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பீடி, சிகரெட், செல்போன்கள் போன்றவற்றை பயன்படுத்துவதாகவும், சிறை காவலர்களுடன் மோதலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது சிறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டாலும், கைதிகளின் இதுபோன்ற செயல்களை  தடுக்க முடிவதில்லை.

கைதிகளை கண்காணிக்க ட்ரோன் கேமரா -  கோவை மத்திய சிறை நடவடிக்கை...

ஆகையால் கண்காணிப்பை தீவிரப்படுத்த கோவை மத்திய சிறை உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்காக சிறை வளாகத்தில் கைதிகளை கண்காணிக்கவும், கூடுதல் கண்காணிப்பிற்காகவும்  ட்ரோன் கேமராக்களை பயன்படுத்த உள்ளதாகவும், அதற்காக ரூ. 22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சிறை வளாகத்தில் முதன்முறையாக ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த உள்ளதால், கைதிகளின் அத்துமீறலை ஆதாரத்துடன் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என சிறைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.  கோவை மத்திய சிறையில் ஏற்கனவே 50 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.