பண்டிகை நாட்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தவறாது பணிக்கு வர வேண்டும்!!

 
bus ticket

வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தவறாது பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள்,  விடுமுறை நாட்களில் போக்குவரத்து கழகம் என்பது மிக சுறுசுறுப்பாக இயங்கும் காரணம். பல்வேறு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர்.

BUS

இந்த சூழலில் விடுமுறை நாட்கள்,திருமணம் முகூர்த்தம் ,பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் , ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிக்கு வருவதில்லை என்ற புகார் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

bus

இந்நிலையில் அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களும் பொதுமக்களின் நலன் கருதி பண்டிகை நாட்களில் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. விழா காலங்கள் மற்றும் விடுமுறை நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓட்டுநர் நடத்தினர்களிடம் கண்ட்ரோல் சார்ட்டில் கையொப்பம் பெற்று பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் வலியுறுத்தியுள்ளது . இது தொடர்பாக அனைத்து மண்டல மேலாளர்களும் பேருந்துகள் இயக்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் எனவும் போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.