அரசுப் பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு கறிவிருந்து சாப்பிட சென்ற ஓட்டுநர்

 
ச்

ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் அரசுப் பேருந்தை எடுத்துக் கொண்டு காதணி விழாவுக்கு சென்று கறி விருந்து சாப்பிட்டுள்ளார் அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர்.

ராமேஸ்வரத்தில் கறி விருந்து சாப்பிடுவதற்காக அரசு பேருந்தை எடுத்து சென்ற ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு செல்லும் அரசு பேருந்தை ஓட்டுநர் தனியாக எடுத்து சென்றுள்ளார். பேக்கரும்பில் நடந்த காதணி விழாவுக்கு சென்ற ஓட்டுநர், நடுரோட்டில் சாவியோடு பேருந்தை நிறுத்திவைத்துள்ளார். ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தை எடுத்து மாற்று வழித்தடத்தில் இயக்கி பேக்கரும்பில் நடுரோட்டில் 45 நிமிடங்களுக்கு நிறுத்திவிட்டு விருந்தில் சாப்பிட்டுவந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மேலதிரிகள் தெரிவித்துள்ளனர்.