ஓடும் பேருந்தில் மாரடைப்பால் ஓட்டுநர் உயிரிழப்பு!
பழனி அருகே மாட்டுப்பாதையில் தனியார் பேருந்து ஓட்டுநர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். துரித நேரத்தில் செயல்பட்டு நடத்துநர் பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

#JUSTIN பழனி அருகே மாட்டுப் பாதையில் தனியார் பேருந்து ஓட்டுநர் திடீர் மாரடைப்பால் மரணம்; துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய நடத்துநர்#Palani #PrivateBusDriver #HeartAttack #HeartAttack #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/vm8lWnjlVw
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 23, 2025
பழனி அருகே தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மாரடைப்பால் சரிந்து விழ, அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு கையால் பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தி, நடத்துநர் விபத்தை தடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளது. நடத்துநர் சமயோஜிதமாக செயல்பட்டு பேருந்தின் பிரேக்கை அழுத்தியதால் நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர். எனினும், கவலைதரும் விதமாக ஓட்டுநர் பிரபு அங்கேயே மரணமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடத்துனர், “என்னால முடியல நெஞ்சு வலிக்கிது விமல்னு... அப்படியே ஸ்டீயரிங்ல இருந்து விழுந்துட்டாரு.. உடனே ஹேண்ட் பிரேக் போட்டு பஸ்ஸ நிறுத்தி பல உயிர்களை காப்பாற்றினேன். ஆனால் ஓட்டுநரை மட்டும் காப்பாற்ற முடியவில்லை” என்றார்.


