ஜூலை 30-ஆக.1 வரை சென்னையில் குடிநீர் விநியோகம் ரத்து

 
லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் - எண்கள் அறிவிப்பு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் - எண்கள் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் 7 முதல் 13 வரையுள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ குடிநீர் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு

சென்னை மாநகராட்சியின் 7 முதல் 13 வரையுள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வரும் பிரதான குழாயை, மற்றொரு குழாயோடு இணைக்கும் பணியால் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களில் தாம்பரம் மாநகராட்சியின் சில பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதேபோல் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய பகுதிகளில் விநியோகம் நிறுத்தப்படும்.