கோனியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு..! அரைக்கால் டவுசர், லெக்கின்ஸ் அணிந்து வர தடை..!

 
1 1

கோவை கோனியம்மன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு, அறநிலையத்துறை ஆடைக்கட்டுப்பாடு விதித்துள்ளது.

கோவையின் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கும் பெரியகடை வீதி கோனியம்மன் கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவில் தேர் திருவிழா மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம்.

இந்த கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு வருகின்ற பக்தர்களில் சிலர் முறையாக ஆடை அணிந்து வருவது இல்லை. இதனால் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.இந்நிலையை மாற்ற, அறநிலையத்துறை சார்பில் கோயிலில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

அதில்ஆண்கள் வேட்டி, சட்டை, பேன்ட்ஸ் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்தும் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க, மேலும் பக்தர்கள் முறையாக ஆடை கட்டுப்பாட்டை கடை பிடிக்கிறார்களா என கோவில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.