“தரணி கொண்டாடும் தலைவனை பாத்து வீரத் தமிழ்நாடே கொண்டாடும்”- திமுக வெளியிடப்பட்ட திராவிட பொங்கல் பாடல்
“தரணி கொண்டாடும் தலைவனை பாத்து வீரத் தமிழ்நாடே கொண்டாடும்” என திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திராவிட பொங்கல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் விரைவில் தமிழர்களால் விமர்சையாக திராவிட பொங்கலாக கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக துணை முதல்வரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பெயரில் பொங்கல் திருநாள் அன்று அனைத்து மாவட்ட,ஒன்றிய, நகர, பேரூர் கழகத்தின் சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க அறிவுறுத்தி இருந்தார்.
தரணி கொண்டாடும் தலைவனை பாத்து
— Top Tamil News (@toptamilnews) January 11, 2026
வீரத் தமிழ்நாடே கொண்டாடும்!
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட திராவிட பொங்கல் பாடல்..#DMK #MKStalin #Pongal #UdhayanidhiStalin #திராவிடப்_பொங்கல் pic.twitter.com/SqP0up3VWB
இந்நிலையில் திமுக சார்பில் வெளியிடப்பட்ட திராவிட பொங்கல் வாழ்த்து பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொங்கல் திருநாளை திமுகவினர் திராவிட பொங்கலாக கொண்ட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அந்த வகையில், திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள திராவிட பொங்கல் வாழ்த்து பாடலில், சமூக வலைதளத்தில் ஏராளமானோரால் பகிரப்பட்டு வருகிறது.


