#BREAKING டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்- சமபங்கீடு முறை ரத்து, ஊழியர்களுக்கு சீருடை

 
s

டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்- சமபங்கீடு முறை ரத்து, ஊழியர்களுக்கு சீருடைடாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு சரக்கு அனுப்பும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு சரக்கு அனுப்பும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப். 21 முதல், ஒவ்வொரு கடையின் உண்மையான தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே சரக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து சப்ளையர்களின் சரக்குகளையும் சமமாகப் பிரித்து வழங்கும் ‘Equal Apportionment' முறை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விற்பனையாகாமல் தேங்கும் சரக்குகள் குறைவதுடன், அதிகம் விற்பனையாகும் பிராண்டுகள் தேவைக்கேற்ப கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேபோல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 முதல் சீருடை அணிதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 3 செட் சீருடைக்கு தலா ரூ.2,000 வீதம் ரூ.6.000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். மேற்பார்வையாளருக்கு லைட் புளு சட்டை, நேவி புளு பேண்ட்; துணை விற்பனையாளருக்கு Beige கலர் சட்டை, டார்க் புளு பேண்ட். சீருடையில் இடது நெஞ்சில் TASMAC லோகோ இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.