‘டிராகன்’ 3 நாட்களில் ரூ.50 கோடி வசூல்- அதிகாரபூர்வ அறிவிப்பு

 
டிராகன்

மூன்று நாட்களில் 50 கோடி வசூலை கடந்தது பிரதீப் ரங்கநாதன் நடித்த  டிராகன் திரைப்படம்.

Image


ஓ மை கடவுளே படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிராகன். இதற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.  ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அப்படத்தின் மூலம் ரசிகர்களின் விருப்பமான நடிகராகவும் மாறினார். தற்பொழுது அவருடைய நடிப்பில் இரண்டாவது திரைப்படமாக இது உருவாகி உள்ளது. முதலில் பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வர இருந்த இப்படம் விடாமுயற்சி படத்துக்காக பிப்ரவரி 21ஆம் தேதி புதிய வெளியீட்டு தேதியாக அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த இப்படம், மூன்று நாட்களில் 50 கோடி வசூலை கடந்ததாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். வார இறுதியில் தமிழ்நாட்டில் ரூ.24.9 கோடியும், தெலங்கானாவில் ரூ.6.25 கோடியும், கேரளா / கர்நாடகா / வடக்கில் ரூ.  4.37, வெளிநாட்டில் ரூ. 14.7 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.