விமானத்தில் இருக்கை மாறியதால் கிடைத்த அதிர்ஷ்டம்: ரஜினியுடன் செல்பி எடுத்த 'டிராகன்' நடிகை!

 
Q

'டிராகன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்த 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. சமீபத்தில் வெளியான 'இதயம் முரளி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், அடுத்ததாக ஜி.வி. பிரகாஷுடன் 'இம்மார்டல்', துல்கர் சல்மானுடன் 'ஐ அம் கேம்' என்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய படத்திலும், நடிகர் சூர்யாவுடனும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கிடையில், சமீபத்திய விமானப் பயணத்தின்போது நடிகர் ரஜினிகாந்தை தற்செயலாக சந்தித்த நடிகை கயாடு லோஹர், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கயாடு லோஹர் நடிகர் ரஜினியுடன் செல்பி எடுத்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இது குறித்து பேசிய கயாடு லோஹர், “நான் அன்று விமானத்தில் வேறு இருக்கையில் அமர்ந்திருந்தேன். இரண்டு ஆண்களுடன் அமர்ந்திருந்தது. எனக்கு சவுகரியமாக இல்லை. அதனால் எனது சீட்டை மாற்றினேன்.

அப்போதுதான் ரஜினி சாரை பார்த்தேன். விமானம் தரையிறங்கியதும் அஷ்வத்துக்கு போன் செய்தேன். அப்போது அவர் தர்மன் ஷூட்டிங்கில் இருந்தார். அவரிடம் நான், 'ரஜினி சாரிடம் என்னை அறிமுகப்படுத்தி வையுங்கள்' என சொன்னேன். அதற்கு அவரோ, நீங்களே போய் பேசுங்கள். ஒருவேளை அவருக்கே உங்களை தெரிந்திருக்கலாம்' என கூறினார்.

அதனை கேட்டு ரஜினியின் இருக்கையிடம் சென்று, 'நான் டிராகன் படத்தின் ஹிரோயின்' என அறிமுகப்படுத்திக்கொண்டேன். அதற்கு அவர். நீங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறீர்கள் என சொன்னார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். பிறகு அவரே என்னிடம், போட்டோ சரியாக வந்திருக்கிறதா என செக் செய்துகொள்ள சொன்னார்" என்று ரஜினியுடன் செல்பி எடுத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டா.ர்.