நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு?- பெயர் இல்லாதவர்கள் என்ன வேண்டும்?
தமிழகத்தில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை எப்படி பார்க்கவேண்டும், பெயர் இல்லாதவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in இணையதளம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில், தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து வரைவு வாக்காளர் அட்டை விவரங்களை பார்க்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், இறந்தவர்கள், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளர்கள் (Absent), இடம் பெயர்ந்தவர்கள் (Shifted), இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் (ASD பட்டியல்கள்) இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் (DEO) இணையதளங்களில் வெளியிடப்பட்டும். பொதுமக்கள் தங்களது விவரங்களை இப்பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 பூர்த்தி செய்து வழங்க வேண்டும். மேலும் இணையதளம் மூலமாகவும் படிவங்களை சமர்ப்பிக்கலாம். பெயர் சேர்ப்பதற்கு, ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 50 படிவம் 6 உள்ளது. அவர்களிடமிருந்து படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே திருப்பி வழங்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிச.19-ம் தேதி முதல் ஐனவரி 18ம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்புகளை தெரிவிக்கலாம்.
புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்


