சங்கர நேத்ராலயா நிறுவனர் பத்ரிநாத் மறைவு - அண்ணாமலை இரங்கல்!!

சங்கர நேத்ராலயா நிறுவனர் பத்ரிநாத் மறைவையொட்டி அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கும் தரமான கண் மருத்துவ சிகிச்சை, இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்தவர். கண் மருத்துவக் கல்விப் பணிகளிலும் சிறந்து விளங்கியவர். உயரிய பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்.
இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
— K.Annamalai (@annamalai_k) November 21, 2023
கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கும் தரமான கண்… pic.twitter.com/zxo9KkucC9
டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் மறைவு, நம் சமூகத்துக்கும், மருத்துவ உலகுக்கும் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும், தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என்று குறிப்பிட்டுள்ளார்.