மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேலும் மீண்டும் நியமனம் - பேரவரையில் அமைச்சர் மா.சு அறிவிப்பு...

 
மதுரை மருத்துவக் கல்லூரி  முதல்வராக ரத்தினவேலும் மீண்டும் நியமனம் - பேரவரையில் அமைச்சர் மா.சு அறிவிப்பு...

சமஸ்கிருத உறுதிமொழியேற்பு சர்ச்சையால்  காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த  டீன்  ரத்தினவேலு,  மீண்டும் கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.  

மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த வாரம் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. அந்தநிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர்  பங்கேற்றிருந்தனர்.  அப்போது வழக்கமாக ஏற்கப்படும்  ஹிபோக்ரட்டிக் (Hippocrati  உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள்,  சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சபத் உறுதிமொழி ஏற்றனர். இந்த விவகாரம் பெரும்  பெரும் சர்ச்சையானதை அடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு  மாற்றப்பட்டார்.  

மதுரை மருத்துவக் கல்லூரி  முதல்வராக ரத்தினவேலும் மீண்டும் நியமனம் - பேரவரையில் அமைச்சர் மா.சு அறிவிப்பு...

 இந்த விவகாரம் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதீஷ் குமாரவேல் உள்ளிட்ட 4 பேரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து ஆட்சியர் அனீஷ்சேகர் விசாரணை நடத்தினார். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு தேசிய மருத்துவ கவுன்சிலர் வெளியிட்டுள்ள ‘மகரிஷி சரக் சபத்’ உறுதிமொழியைத்தான் நாங்கள் எடுத்து கொண்டோம் என்றும்,  சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை என்றும் மாணவர்கள் விளக்கமளித்தனர்.

ma subramanian

 இந்த நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை  ரத்து செய்ய வேண்டும் என   தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர், முதலமைச்சரிடம் கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளனர். தொடர்ந்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் டீன் ரத்தினவேல் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தினர், இதையடுத்து  காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த டீன்  ரத்தினவேலு,  மீண்டும் மதுரை மருத்துவக்  கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுவார்  என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்