ரியல் "ஜெய்பீம்" நாயகனுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது - முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவுப்பு!

 
திருநாவுக்கரசு - நீதிபதி சந்துரு

2021 ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான பெரியார் விருது மற்றும் டாட்கர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் விருதுத்தொகையினையும் ரூ. 5 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.


தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் சிறப்பு  செய்யும் வகையில் சமூக நீதிக்கான ’தந்தை பெரியார் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.  அதேபோல்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக  அரும்படுபட்டுவரும்  தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் ஆண்டுதோறும் ’டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு விருது’ வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி 2021 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான ’தந்தை பெரியார் விருது’ திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க. திருநாவுக்கரசுக்கு வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.   

பெரியார் விருது

அதேபோன்று 2011ஆம் ஆண்டிற்கான ’டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது’ சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும்  விருது பெறுபவர்களுக்கு  ரூபாய் ஒரு லட்சம்  விருதுத் தொகை வழங்கப்படும்.  இந்த ஆண்டு விருதுத் தொகையை ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  விருதுகள் மற்றும் விருது  தொகையுடன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  வரும் சனிக்கிழமை (ஜனவரி 15 ) திருவள்ளுவர் தினத்தன்று  விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசு
இதில்  பெரியார் விருது பெறும் திராவிட இயக்க ஆய்வாளர்  திருநாவுக்கரசு, ‘ திராவிட இயக்கத்தின் நடமாடும் கலைக்களஞ்சியம்’ என போற்றப்படுபவர்.   நீதிக்கட்சி வரலாறு எனும் நூலை எழுதியவர்.  திராவிட இயக்க வேர்கள்,  திராவிட இயக்க தூண்கள் போன்ற திராவிட  இயக்கத்தின் பல்வேறு வரலாற்று நூல்களை எழுதி புகழ்பெற்றவர். மேலும்  திருநாவுக்கரசு கடந்த 2006ஆம் ஆண்டு தமிழக அரசின் திரு.வி.க விருதையும் பெற்றிருக்கிறார். 

நடிகர் சூர்யா - நீதிபதி சந்துரு

  டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெறும் நீதிபதி சந்துரு அவர்கள்,  தன்னுடைய பணி காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி சாதனை படைத்திருக்கிறார்.  வழக்கறிஞராக பணியாற்றிய போது ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்கள் குரலாய் உயர்நீதிமன்றத்தில் ஒழித்து பல்வேறு சாதனைகளை புரிந்தவர். அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம்,  நீதிபதி சந்துரு எடுத்து நடத்திய வழக்கு ஒன்றை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டது. இதில் சந்துரு கதாப்பாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பார்.