காதல் மனைவியிடம் ரூ.10 லட்சம் கேட்டு டார்ச்சர்... யூடியூபர் சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
பிரபல யூடியூபர் சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் டெக் பாஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமாகி டெக் சூப்பர் ஸ்டார் என்ற சேனல் ஆரம்பித்தவர் சுதர்சன். செல்போன், லேப்டாப், ஹெட்செட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பற்றி யூடியூபில் விமர்சனம் செய்து பிரபலமானவர். சுதர்சன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போது 30 சவரன் நகைகள், ரூ.5 லட்சம் பணம் மற்றும் சீர்வரிசை பொருட்களை சுதர்சன் வரதட்சணையாக பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் மீது வரதட்சணை புகார் எழுந்துள்ளது.
வீடுகட்ட கூடுதல் பணம் வேண்டும் என்று கர்ப்பிணி மனைவி அடித்து விரட்டியதாகவும் சுதர்சன் மீது பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் பணம் கொடுக்க மனைவி தயாரான நிலையில் ரூ.10 லட்சம் கேட்டு சுதர்சன் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்தாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. காதல் மனைவி அளித்த புகாரின் பேரில், சுதர்சன், அவரது தாய் மாலதி, தந்தை சுந்தர்ராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனையடுத்து சுதர்சன் தலைமறைவானார்.


