சென்னையில் விரைவில் டபுள் டெக்கர் பேருந்துகள்..!
சென்னையில் தற்போது சாதாரண பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள், தாழ்தள பேருந்துகள், மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் போக்குவரத்து வசதிகளை மேலும் மேம்படுத்தும் வகையில், டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது, சென்னையில் கடைசியாக 2008ஆம் ஆண்டு டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. 1970ஆம் ஆண்டுகளில் முதன்முதலில் சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட்டன. 1980ஆம் ஆண்டுகளில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, 1997ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கும், 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டன.
அதன்பிறகு, தற்போது மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துகழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவை தற்போது மின்சார பேருந்துகளாக இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கிறது. 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. .மொத்தம் 20 பேருந்துகளை அடுத்தடுத்து இரண்டு மாதங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எந்தெந்த வழித்தடங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பது ஆலோசித்து மாநகர போகக்குவரத்து டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க உள்ளது.
டபுள் டெக்கர் பேருந்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒற்றை அடுக்கு மின்சார பேருந்தை விட 1.5 மடங்கு அதிகமாக கிட்டத்தட்ட 90 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை. இதன் மூலம், சாலைகளில் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். நவீன முறையில் வடிவமைக்கப்படும் என்பதல், பயணிகள் ஏறி இறங்க வசதியாக இருக்கும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக வசதிகளும் இருக்கும்.
சென்னையின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு உதவும். மேலும், வார இறுதி நாட்கள், வேலை நாட்களில் பேருந்துகள் கூட்டம் அதிகமாக இருப்பதை தவிர்க்கும். ஒட்டுமொத்தமாக, டபுள் டெக்கர் பேருந்துகள், சென்னை மக்களுக்கு பெரிதம் பயனுள்ளதாக இருக்கும். எனவே, இது எப்போது இயக்கப்படும் என ஆவலுடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

