சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவை! டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி..?
தமிழக முதல்வர் ஸ்டாலின் டபுள் டெக்கர் பேருந்து சேவையை தொடங்கி வைத்த நிலையில், ஜனவரி 24ம் தேதி முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை இயக்கப்படுகிறது.இந்த பேருந்து தினசரி பயணிகளுக்கு மட்டுமில்லாமல், சுற்றுலா செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. வார நாட்களில் பயணிகளுக்கானவும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளுக்காக டபுள் டெக்கர் பேருந்துகள் பயன்படுத்ப்படும்.
டபுள் டெக்கர் பேருந்தில் 50 பயணிகளுக்கு மேல் பயணம் மேற்கொள்ளலாம். இந்த பேருந்து முக்கிய இடங்கள் வழியாக செல்கிறது. அதன்படி, எல்ஐசி கட்டிடம், ஸ்பென்சர் பிளாசா, மக்கான் மஸ்ஜித், சென்னை உயர் நீதிமன்றம், செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை துறைமுகம், நேப்பியர் பாலம், அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் வழியாக செல்லும்.
மேலும், மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், பட்டினம்பாக்கம், சாந்தோம், காவல் ஆணையர் அலுவலகம், ராணி மேரி கல்லூரி, விவேகானந்தா ஹவுஸ், பிரசிடென்சி கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகம், எழிலகம், தூர்தர்ஷன், ராஜாஜி ஹால், ஓமந்தூரர் அரசு மருத்துவமனை வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளத.
டபுள் டெக்கர் பேருந்து வார நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும், வார இறுதி நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்தில் பயணிக்க ttdconline.com என்ற தளத்தில் முன்பதிவு செய்யலாம். முன்பதிவின்போது ஏறும் இடம், இறங்கும் இடத்தை உள்ளிட்டு, அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செய்ய வேண்டும். இதன்பிறகு, உங்களது ஏறும் இடத்தில் இருந்து டபுள் டெக்கர் பேருந்தில் பயணிக்கலாம். இதற்கான சுற்றுலாவுக்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்க ரூ.150 வசூலிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


