இந்த வருஷம் டபுள் ட்ரீட்.. வெளியான சூப்பர் அறிவிப்பு..!

 
1 1

2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பின் 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு 21 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதுவே கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைகளின்போது பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ஆகியவை அடங்கிய தொகுப்புடன் 1000 ரூபாயும் வழங்கப்பட்டது.

ஆனால், 2025 பொங்கல் பண்டிகையின்போது ரொக்க பணம் வழங்கப்படவில்லை. மாறாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே கொடுக்கப்பட்டது. இது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், 2026-ல் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதனால் இந்தமுறை பொங்கல் தொகுப்பில் ரொக்க பணம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொங்கல் தொகுப்பில் அதிகபட்சமாக 2500 ரூபாய் ரொக்க பணமாக கொடுக்கப்பட்டது. இம்முறை இதனை தாண்டி 5000 ரூபாய் ரொக்க பணமாக கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது இரண்டு கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருந்தனர். அந்தக் கணக்கில் பார்த்தால் கூட இவர்களுக்கு 5000 ரூபாய் வழங்குவதற்கு 11 ஆயிரம் கோடி தேவைப்படும் என்பது குறிப்பிடதக்கது.

இதனிடையே விடுப்பட்டவர்களுக்கு மகளிர் உரிமை தொகை டிசம்பர் 12 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தள்ளது. டிசம்பர் 15 தேதி வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் உதயநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

இதனால் டிசம்பர் மாதம் டிசம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை பெற்ற கையோடு ஜனவரி மாதம் மகளிர் உரிமைத்தொகை மற்றும் பொங்கல் பரிசு என அடுத்தடுத்து ரொக்கப்பணத்தை ரேஷன் அட்டைத்தாரர்கள் பெற இருப்பதால் தை மாதம் அவர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது.