மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்து

 
ச் ச்

சென்னை பட்டினம்பாக்கத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனைக்காக கொண்டு வரப்பட்ட டபுள் டக்கர் பேருந்துகளை மக்கள் ஆச்சர்யத்துடன் புகைப்படம் எடுத்து சென்றனர்.


சென்னையில் அதிகரித்து வரும் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை கருத்தில் கொண்டு சென்னை மாநகர், புறநகர்ப் பகுதிகளில் பயணிகளின் தேவைக்கேற்ப அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகளை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகள் முதலே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இம்மாத இறுதிக்குள் மின்சாரத்தால் இயக்கப்படும் புதிய மின்சார டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்குவதற்காகவும் அதேப்போன்று சுற்றுலா பயன்பாட்டுக்காகவும், தனியார் பங்களிப்புடன் டபுள் டெக்கர் சோதனைப் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கி பரிசோதிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தற்போது சென்னையில் விரைவில் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்கும் பொருட்டு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தரச்சான்றிதழ் பெறுவதற்காக சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டபுள் டக்கர் பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பார்வையிட்டுள்ள சூழலில் பேருந்து இயக்கத்திற்கான தரச்சான்றிதழ் கிடைத்த உடன் சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இம்மாத இறுதிக்குள் விரைவில் டபுள்டக்கர் பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்த மின்சார டபுள் டக்கர் பேருந்தில் முன்புறமும், பின்புறமும் படிக்கட்டுகள், கீழ் தளத்தில் 29 இருக்கைகள், மேல்தளத்தில் 36 இருக்கைகள் என மொத்தம் 70 இருக்கைகளும், சிசிடிவி கேமராக்கள், குளிர்சாதன வசதி, அனைத்து இருக்கைகளிலும் அவசர சூழலில் கண்ணாடிகளை உடைத்து வெளியேறவதற்கான உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.