இன்று உங்க போனுக்கு பூகம்பம் மெசேஜ் வந்தால் பதற வேண்டாம்!
மே 2, 2026 (இன்று), இந்தியா முழுவதும் நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை பேரிடர்களின் போது பொதுமக்களை எச்சரிக்கும் புதிய மொபைல் அவசர எச்சரிக்கை அமைப்பின் (Cell Broadcast Alert System) சோதனை நடைபெறுகிறது
நோக்கம்: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் தொலைத்தொடர்பு துறை (DoT) இணைந்து இந்த தொழில்நுட்பத்தை சோதனை செய்கின்றன. இது பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க உதவும்.
எச்சரிக்கை செய்தி: உங்கள் மொபைலில் லேசான சத்தம் அல்லது அதிர்வுடன், "NDMA will test Cell Broadcast Alerts on 2 May 2026 in your area" (NDMA உங்கள் பகுதியில் 2 மே 2026 அன்று செல் ஒலிபரப்பு எச்சரிக்கைகளை சோதனை செய்யும்) என்ற செய்தி ஆங்கிலம், இந்தி அல்லது மாநில மொழியில் வரும்.
இது வெறும் சோதனை மட்டுமே. நீங்கள் அச்சமடையத் தேவையில்லை. இந்தச் செய்தி வந்தால், அதை படித்துவிட்டு சாதாரணமாக விட்டுவிடலாம். எந்த நடவடிக்கையும் (Response) எடுக்கத் தேவையில்லை.
இந்தச் சோதனை டெல்லி NCR மற்றும் அனைத்து மாநில/யூனியன் பிரதேச தலைநகரங்களில், வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் நடைபெறும்.

