"கமலுக்கு எதிராக போட்டு விட வேண்டாம்" - மேடையில் பதறிய நடிகர் ரஜினிகாந்த்

 
tn

எனது பேச்சினை கமலுக்கு எதிராக போட்டு விட வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் நய்யாண்டியாக கூறியுள்ளார்.

rajinikanth
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவுக்கு ஆதரவாக கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சூழலில் நடிகரும் கமலஹாசனின் நெருங்கிய நண்பருமான ரஜினிகாந்த் காவிரி மருத்துவமனையின் கிளையை சென்னை வடபழனியில் இன்று தொடங்கி வைத்தார் .

rajini

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் , முதலில் காவேரி மருத்துவமனை ஏங்கே உள்ளது என்று கேட்டால் கமலஹாசன் வீட்டிற்கு பக்கத்தில் உள்ளது என்றனர், ஆனால் இன்று காவேரி மருத்துவமனை அருகே தான் கமல்ஹாசன் வீடு உள்ளது என்று சொல்கின்றனர். சும்மா உதாரணத்திற்கு தான் சொல்கிறேன் கமலுக்கு எதிராக போட்டு விட வேண்டாம் . கமலஹாசனை கலாட்டா செய்வதாக போட்டுவிட வேண்டாம், இங்கு வந்தால் ஒரு சில மீடியாக்கள் மட்டுமே வரும் என்று எதிர்பார்த்தேன் இங்கு நிறைய பேர் வந்துள்ளார்கள், வீடியோவை பார்த்தாலே  எனக்கு பயம்.  இது தேர்தல் நேரம் என்பதால் மூச்சு வீட்டாலே பயமாக உள்ளது என்றார்.