இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சகம்..!
Oct 4, 2025, 06:00 IST1759537843000
மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில், இருமல் மருந்து உட்கொண்டதால் 11 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் நிலையில், இரண்டு வயதுக்குட்பட்ட இருமல் மருந்து கொடுக்க கூடாது என மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை சார்பில், அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
* இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கக் கூடாது.
* பொதுவாக 5 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கு, இருமல், சளி மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை.
* டாக்டர்களின் பரிந்துரைகளை பின்பற்றுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.
* எந்தவொரு வைரஸ் நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் சிகிச்சை அளிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



