அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம்..! மன்னிப்பு கேட்ட தவெக அமைச்சர் கீர்த்தனா..!

 
1

தவெக சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டவர் கீர்த்தனா.இன்ஃப்ளுவன்சராக இருந்த இவருக்கு தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.இதற்கு முன்னதாக திமுக கட்சியின் ஐடி விங்கில் பணியாற்றியவர் என கூறப்படுகிறது.


கடந்த 11ஆம் தேதியன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி சட்டமன்றத்தில் நடைப்பெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கீர்த்தனா தங்களது அரசியல் கட்சியின் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பை பற்றி பேசியதோடு, அவர் சொன்ன ஒரு வார்த்தை பலருக்கும் கோபத்தை வரவழைத்துள்ளது.

“இன்றைய நாளில், பெண்கள், வயதானவர்கள், ஊனமுற்றவர்கள் என பலர் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்று கீர்த்தனா கூறினார். இதில், அவர் சொன்ன ஊனமுற்றவர்கள் என்கிற வார்த்தை ரொம்பவும் தவறானது என்றும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


கடும் கண்டனங்களை எதிர்கொண்ட பின்னர், கீர்த்தனா மன்னிப்பு கேட்டுள்ளார். ”அண்மையில் நான் தெரிவித்த கருத்துகள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதை அறிகிறேன். மாற்றுத்திறனாளிகள் குறித்து மரியாதைக்குறைவாக பேச வேண்டும் என்கிற எண்ணம் ஒரு போதும் எனக்கு இல்லை. மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்த மகள் தான் நான். அந்த வலியும் வேதனையும் எனக்கும் உள்ளது. அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம். என்னுடைய வார்த்தைகள் யாருடைய மனதையேனும் புண்படுத்தியிருந்தால், அதற்காக மனமார்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.