இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..! பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்..!
ஒரு குழந்தையின் பிறப்பை உறுதிப்படுத்தி, அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து அரசின் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிறப்பு பதிவு என்பது குழந்தையின் முதல் உரிமையாகவும். பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர், பிறந்த தேதி, நேரம், இடம், மருத்துவமனை, பெற்றோர் பெயர் உள்ளிட்டவை இடம்பெறும்.
பள்ளி சேர்க்கை முதல் ஆதார் அட்டை, வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற பிறப்பு சான்றிதழ் என்பது முதன்மையானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து, இலவசமாக பிறப்புச் சான்றிதழை பெற்றோர் பெறும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், சில நேரங்களில் குழந்தை பிறந்து சில நாட்களில் பெயர் வைக்காத காரணத்தினால், குழந்தையின் பிறப்பை மட்டும் பெற்றோர் பதிவு செய்து, பெயர் இடம்பெறாத சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். குழந்தைக்கு பெயர் வைக்கப்பட்ட பின்னர், பெயரை சேர்ந்து புதுப்பிக்கப்பட்ட சான்றிதழை பெற வேண்டும். அப்போதுதான் அந்த சான்றிதழ் முழுமையான மாறும்.
ஆனால், அப்படி பெயரை சேர்க்காமல் உள்ளவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை சமீபத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறை வழங்கியுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதார இயக்குநர் மற்றும் மாநில முதன்மை பிறப்பு, இறப்பு பதிவாளர் சோமசுந்தரம் வெளியிட்ட அறிவிப்பில், '27.11.2011-க்கு முன்னர் (15 வருடங்களுக்கு முன்னர்) பிறந்து, பிறப்பு பதிவேட்டில் பதிவு செய்து, பெயர் பதியப்படாமல் இருக்கும் பதிவுகளுக்கு பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பதற்கான இறுதியாக 26.09.2026 வரை அவகாசம் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
செப்.26ஆம் தேதியே கடைசி நாள்
அதன்படி, பிறப்புச் சான்றிதழில் உங்கள் குழந்தையின் பெயரை சேர்க்க செப்.26ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கல்விச்சான்று, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்பித்து பெயரை சேர்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகங்கள்
- பிறப்பு இறப்பு பதிவாளர், கிராம நிர்வாக அலுவலகம்
- பிறப்பு இறப்பு பதிவாளர், பேரூராட்சி அலுவலகம்
- பிறப்பு இறப்பு பதிவாளர், நகராட்சி அலுவலகம்
- பிறப்பு இறப்பு பதிவாளர், மாநகராட்சி அலுவலகம்
- சுகாதார ஆய்வாளர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்
கட்டணம் எவ்வளவு?
பொதுவாக குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பதிவு மட்டும் செய்துவிட்டு, பெயர் சேர்க்காமல் இருப்பவர்கள் ஒரு வருடத்திற்குள் பெயர் சேர்க்க கட்டணம் கிடையாது.
இதுவே, 1 வருடத்திற்கு பின்னர் மற்றும் 15 வருடங்களுக்குள் என்றால், தாமதமாக பெயர் சேர்க்க ரூ. 200 கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி, தற்போது ரூ. 200 கட்டணம் செலுத்தி பெற்றோர் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளித்து பெயரை சேர்த்துக்கொள்ளலாம். இதுவே இறுதி வாய்ப்பு என்றும், இதன் பின்னர் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.