வரும் 28ம் தேதி வானத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க..! வெறும் கண்களால் பார்க்கலாம்..!

 
1

புதன், வெள்ளி, நெப்டியூன், சனி, யுரேனஸ், வியாழன் ஆகிய 6 கோள்கள் தென்படும் அரிய வானியல் நிகழ்வு வரும் 28ம் தேதி நிகழவுள்ளது.சூரியன் மறைவுக்கு பின் இதனை வெறும் கண்களால் காணலாம் என நாசா தகவல் வெளியாகியுள்ளது.  


சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி, சந்தித்து கொள்ளும் நிகழ்வு அபூர்வமாக நடக்கிறது. அவ்வகையில், வரும், 28ம் தேதி, வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்பட உள்ளன. தொலைநோக்கி வாயிலாக யுரேனஸ், நெப்டியூனை காண முடியும். வெறும் கண்களால் செவ்வாய், சனி, வியாழன், வெள்ளி கோள்களை காணமுடியும். அறிவியல் அமைப்பினர் கூறுகையில், 'கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் என்பதல்ல. நாம் பூமியில் இருந்து பார்க்கும் போது இந்தக் கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல நமக்கு காட்சி தரும். சூரியன் மறைவுக்கு பின் மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் இக்காட்சியை, வீட்டின் மாடியில் இருந்து கூட நம்மால் காண முடியும். சக்திவாய்ந்த தொலைநோக்கி வாயிலாக ஒவ்வொரு கோள்களையும், முழுமையாக காண முடியும். வானிலை மையத்தின் Star Walk App வானியல் செயலி வாயிலாக எந்த கோள் எங்குள்ளது என்பதை துல்லியமாகஅறிந்து கொள்ள முடியும்,' என்றனர்.