மிஸ் பண்ணாதீங்க..! இலவச லேப்டாப் வழங்கும் தேதி அறிவிப்பு...!
கல்லூரி மாணவர்கள் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளது. இந்த திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்து, கைவிடப்பட்டது. 2011ஆம் ஆண்டு முதல்முதலில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் நிதி பிரச்னை காரணமாக 2018ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து, 2021ஆம் ஆண்டு தமிழக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் இத் திட்டத்தை கொண்டு வர பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. கடந்த பட்ஜெட் தாக்கலின்போது, 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தது. இதனை அடுத்து, இதற்காக டெண்டர் பணிகளையும் தமிழக அரசு தொடங்கியது. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டு, 3 நிறுவனங்களுக்கு வழங்க உத்தரவிட்டது. அதாவது, ஏசர், டெல், ஹெச்பி ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஏசி வசதியுடன் இந்த லேப்டாப் உருவாக்கப்பட்டது. இந்த லேப்டாபில் பிரத்யேக அம்சங்களும் உள்ளன. இதனை அடுத்து, கல்லூரி மாணவர்களுக்கு எப்போது லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
எப்போது தொடங்கப்படும்?
இந்த நலையில், முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, தமிழக அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஜனவரி 5-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்டமாக, சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் வழங்கித் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 18ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்த பேசுகையில், "கல்லூரி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து, கல்லூரிக்கு வந்தவுடன் அவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்" என கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அந்த லேப்டாப் வழங்கும் தேதி உறுதி செய்யப்பட்டது. அதாவது, ஜனவரி 5ஆம் தேதி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பால் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இலவச லேப்டாப் யாருக்கெல்லாம் கிடைக்கும்?
முதலில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாம் ஆண்டு படிக்கு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும், தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் பட்டியலின, பழங்குடி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


