தவெகவினருடன் தொடர்பு கொள்ள வேண்டாம் - இபிஎஸ்..!
புதுச்சேரியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.
எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தவெக நிர்வாகிகள் ஒவ்வொரு கட்சிகளின் அலுவலகத்தின் படிக்கட்டுகளை ஏறி, இறங்கி வருகின்றனர்.இது ஒருபுறம் இருக்க தவெகவுக்கு ஆதரவு அளிக்க, அதிமுக எம்எல்ஏக்களில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையிலான ஒரு கோஷ்டி விருப்பம் தெரிவித்துள்ளது. சிவி சண்முகம் ஏற்பாட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் ஓ.எஸ். மணியன், தளவாய் சுந்தரம், மோகன், அருள்மொழி தேவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசலம் ஆகியோர் விடுதியில் தங்கி உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், புதுச்சேரியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்க இபிஎஸ் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் நல்லதே நடக்கும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திமுகவுடன் கண்டிப்பாக கூட்டணி கிடையாது எனவும், அனைவரும் பொறுமை காக்கவும், எம்.எல்.ஏக்கள் யாரும் புதுவையில் இருந்து புறப்பட வேண்டாம்பெரும்பான்மை இல்லாத விஜய் முட்டி மோதி இங்கே வருவார். நம் தலைமையில் ஆட்சி அமையும் எனவும் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தவெகவினர் உங்களுடன் பேச முயற்சிப்பார்கள், யாரும் அவர்களுடன் தொடர்புக்கொள்ள வேண்டாம் எனவும் இபிஎஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

