அமைச்சர் உதயநிதி பள்ளி மாணவர்களின் வளமான எதிர்காலத்தில் விளையாடக்கூடாது!!
Nov 3, 2023, 13:46 IST1698999377761

விளையாட்டுமேம்பாட்டுத்துறை அமைச்சர் பள்ளி மாணவர்களின் வளமான எதிர்காலத்தில் விளையாடக்கூடாது என்று G.K.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ், "பாரதத்தின் எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்பேன் என வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது பள்ளி மாணவ,மாணவிகளிடம் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்கும் செயல் அவர்களிடம் தேர்வுக்கெதிரான மனநிலையை உருவாக்கும்.
வெற்று அரசியல் செய்து பள்ளி மாணவ,மாணவர்களின் வளமான எதிர்காலத்தை பாழடிக்கும் விளையாட்டை விளையாட்டுமேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.