மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியின் அரசியல் செய்ய வேண்டாம்- கோவி. செழியன்
மாணவர் நலனில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய வேண்டாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், “துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியா உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில கவுனர்களும் உரிமை என, கடமை என்ன என்பதை அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. மூன்று உறுப்பினர்கள் தேர்வு குழு என்பதை நான்காக அதிகரிப்பதன் மூலம் அதை செயல்படாமல் தடுப்பது ஆளுநரின் நோக்கமாக உள்ளது. இது நிறைவேறாது. முறைப்படி எல்லா நடக்கவடிக்கை எடுக்கப்பட்டு துணைவேந்தர் நியமனம் செய்யபடும்.
அண்ணா பல்கலை விவகாரத்தில் சட்டத்தின்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சியின் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கின்ற செயல்படுகின்ற முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் மட்டும்தான்” என தெரிவித்தார்.