‘வைரமுத்த ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’ - கலைஞரிடம் கோள்மூட்டிய முக்கிய புள்ளி

 
tn

கேடுகள் ஈட்டி எறியும்போதெல்லாம் கேடயமாவது சத்தியம் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், 
கலைஞருக்கும்,
அ.இ.அ.தி.முகவிலிருந்து
தி.மு.கவில் வந்துசேர்ந்த
ஒரு முக்கியப் புள்ளிக்கும்
நடந்த உரையாடல்

vairamuthu

எனக்கு
வாய்மொழியாக வந்தது;
தயக்கத்தோடு 
கலைஞரையே கேட்டு
உறுதி செய்தது

சொற்கள் மாறியிருக்கலாம்;
சொன்னபொருள் இதுதான்

‘வைரமுத்த
ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’

‘ஏன்? எதனால?’

‘அவரு உங்களப்
புகழ்ந்து பேசுறாரே தவிர
ஜெயலலிதாவ எப்பவும்
திட்ட மாட்டேங்குறாரு’

(கலைஞர்
சிறு சிந்தனைக்குப் பிறகு)

‘நீ அங்க இருந்து
இங்க வந்திருக்க
அங்க இருந்தபோது
என்னத் திட்டுன;
இங்க இருந்து
அந்த அம்மாவத் திட்டுற


வைரமுத்து
எப்பவும் இடம் மாறல
ஜெயலலிதா வைரமுத்துக்கு
எதிரியும் இல்ல

அவரு தமிழுக்காக
நம்மகூட நிக்கிறாரு

இன்னொண்ணு
அவரு யாரையும் திட்டமாட்டாரு;
அது அவரு இயல்பு’

கோள் சொன்னவர்
குறுகிப்போனார்

இப்படித்தான்
கேடுகள்
ஈட்டி எறியும்போதெல்லாம்
கேடயமாவது சத்தியம் என்று பதிவிட்டுள்ளார்.