இமயமலை புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்

 
tn

நடிகர் ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த் சம்பந்தமான காட்சிகள் நிறைவு பெற்றதையடுத்து இதையடுத்து அவர் ஓய்வுக்காக அபுதாபி சென்றார். பின்னர் சென்னை திரும்பிய அவர், ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார்.

rajini

இந்நிலையில் இமயமலை செல்லும் முன் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது, "இப்போது ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் தரிசனம் செய்ய உள்ளேன். வேட்டையன் படம் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

rajini

தொடர்ந்து பேசிய அவரிடம் மீண்டும் மோடி வெற்றிபெறுவார் என்று நினைக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "மன்னிக்கவும், அரசியல் கேள்வி வேண்டாம்" வேண்டாம் என்று கூறினார்.