4 வயது சிறுமிக்கு எமனாக மாறிய நாய்..! நடந்தது என்ன?
திருவண்ணாமலையை சேர்ந்தவர் கார்த்திக் - தமிழ்ச்செல்வி தம்பதியினர் . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளைய மகள் அனாமிகா. வயது (4). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்து உள்ளார்.
இந்த சூழலில் நேற்று முன்தினம் மாலை அனாமிகாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய தந்தை கார்த்திக் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.அப்போது கார்த்திக் ஆரணி நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தில் மோதி உள்ளது. இதில் நிலைத்தடுமாறி கார்த்திக் மற்றும் அனாமிகா இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதில் சிறுமி அனமிக்காவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் தலையில் இருந்து ரத்தம் வந்ததால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கார்த்திக் மற்றும் சிறுமி இருவரையும் மீட்டு சிகிச்சைகாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரண்டு பேருக்கும் சிகிச்சை அளித்த நிலையில், சிறுமி அனமிக்காவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர்.
தொடர்ந்து அனாமிகா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.


