கணவனை கடித்து குதறிய நாய்! மனைவி போலீசில் புகார்

 
சேலத்தில் ஒரே நாளில் 60 பேரை கடித்து குதறிய நாய்!

சென்னை மதுரவாயல் அருகே கணவரின் காலை கடித்து குதறிய நாயின் உரிமையாளர் மீது மனைவி  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நாய்

சென்னை மதுரவாயல் அருகே  ஆலப்பாக்கம் பெருமாள் கோவில் தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரமேஷ் குமார் (வயது 51). இவரது மனைவி தேவி (வயது 41) இந்த நிலையில் நேற்று மாலை வசிக்க கூடிய  வீட்டின் அருகே லாவண்யா என்பவர் வளர்த்து வரும்  நாட்டு நாய் ஒன்று ரமேஷ் குமாரின் இடது கால் பகுதியில் கடித்து குதறியதில் பலத்த காயம் ஏற்பட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு காலில்  இரண்டு  தையல்  போடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தனது கணவரை கடித்துக் குதறிய நாயின் உரிமையாளர் லாவண்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் மேலும் அபாயகரமாக சுற்றித் திரியும் நாயை சென்னை மாநகராட்சி  அங்கிருந்து பிடித்து செல்ல வேண்டும் எனவும் காவல் நிலையத்திலும், சென்னை  மாநகராட்சியிலும் தேவி புகார் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று காலை  அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் நாய் பிடிக்கும் வேனில்  நாயை பிடித்து சென்றனர். மேலும் வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறியதில் நபர் ஒருவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.