விஜய் ஜெயிக்க இத்தனை லட்சம் ஓட்டுக்கள் வேண்டுமா? பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் தேவைப்படும் குறைந்தபட்ச வாக்குகள் எவ்வளவு?

 
VIJAY

விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். திமுக வசம் இருக்கும் இந்த இரு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெறுவாரா? முதலில் டெபாசிட் பெறுவாரா? என்ற கேள்வியும் அவரது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், விஜய் அத்தொகுதியில் டெபாசிட் பெற எத்தனை வாக்குகள் தேவை தெரியுமா ? 

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, ஒரு வேட்பாளர் தான் போட்டியிட்டுள்ள தொகுதியில் பதிவான வாக்குகளில் டெபாசிட் பெற ஆறில் ஒரு பங்கு வாக்கினை பெற வேண்டும். அதாவது பதிவான மொத்த வாக்குகளில் 16.67% வாக்குகள் அவசியம். அதன்படி, பெரம்பூர் தொகுதியில், 2,26,296 (தோராயமாக) வாக்காளர்கள் உள்ளனர். இதில் 89.74% பேர் தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 2,03,.078 பேர் வாக்கு செலுத்தி உள்ளனர். இதில் விஜய் 33,853 வாக்குகள் வாங்கினால் டெபாசிட் பெறுவார்.   

அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், 2,20,191 (தோராயமாக) வாக்காளர்கள் உள்ளனர். இதில் 81.77% பேர் தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 1,80,.051 பேர் வாக்கு செலுத்தி உள்ளனர். இதில் விஜய் 30,013 வாக்குகள் வாங்கினால் டெபாசிட் பெறுவார்.   அதேசமயம் விஜய் வெற்றி பெற பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தலா 1 லட்சம் வாக்குகளை பெற்றால் அவர், எந்த சிரமமும் இல்லாமல் வெற்றி பெறுவார்.